Categories
தேசிய செய்திகள்

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில்…. விரைவில் புதிய நடைமுறை…. முதல்வர் முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையில் முன்மொழி கல்விக் கொள்கை வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தாய்மொழி அல்லது வட்டார மொழி, ஆங்கிலம் மற்றும் வேறொரு மொழி ஆகியவையே இந்த மும்மொழி கொள்கையில் தத்துவமாகும். இந்நிலையில் மத்திய கல்வி நிறுவனங்களின் முழுவதுமாக இந்தி மொழியை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகின்றது.இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இடையில் இந்தி மொழியிலான எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்களை உள்துறை அமைச்சர் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்,ஆங்கிலம் தெரியாத மாணவர்கள் எம்பிபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். இனி அவர்கள் கவலைப்பட வேண்டாம் என அவர் தெரிவித்தார்.அதே சமயம் தனது மாநிலமான உத்திரப்பிரதேசத்திலும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு விரைவில் இந்தியில் கல்வி கற்பிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

அம்மாநிலத்தில் கல்வியை முழுவதுமாக ஆங்கிலத்தில் இருந்து விடுவிப்போம். யார் வேண்டுமானாலும் ஆங்கிலத்தில் படிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் நாட்டில் உள்ள ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் இந்தியில் கல்வியை தொடங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |