12 முதல் 15 வயதிற்குள் இருக்கும் சிறுவர்களுக்கு பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் இங்கிலாந்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்ய பட்டவர்களின் எண்ணிக்கையானது 74 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதனையடுத்து அங்கு நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்துவதில் அந்நாட்டு மக்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது 12 முதல் 15 வயதிற்குள் இருக்கும் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என இங்கிலாந்து நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த பணியானது வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு தெறிவித்துள்ளது. மேலும் அமெரிக்க நாட்டில் தயாரிக்கப்பட்ட பைசர் தடுப்பூசியை 12 முதல் 15 வயதிற்குள் இருக்கும் சிறுவர்களுக்கு செலுத்தலாம் என இங்கிலாந்து நாட்டின் சுகாதாரதுறை நிபுணர்கள் பரிந்துரை அளித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.