Categories
உலக செய்திகள்

மீனை மட்டும் தான் கடல் புறா உண்ணுமா…. ஒரே வாயில் முயல் குட்டியை விழுங்கிய வினோதம்..!!

இங்கிலாந்தில் கடல் புறா ஓன்று விளையாடி கொண்டிருந்த முயல் குட்டியை  உயிருடன் முழுவதுமாக விழுங்கியுள்ளது 

இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் மாகாணத்தில் ஸ்கோஹல்ம் (Skokholm) என்ற இடத்தில் ஐரின் மேண்டஸ் என்ற நபர் ஒருவர் சீகல் எனப்படும் கடல் புறாவினை பற்றி குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம்  கடற்கரைக்கு  அருகில் உள்ள புல் வெளியில் முயல் குட்டி ஒன்று  விளையாடிக் கொண்டிருந்தது.

Image result for Seagull Swallows Rabbit Whole

அப்போது சீகல் முயல் குட்டியை கண்டதும் அங்கு சென்று அதனை கடுமையாகத் தாக்கியது. கடுமையாக தாக்கப்பட்டதால்  முயல் குட்டி எங்கும் நகர்ந்து செல்ல முடியாமல் அதே இடத்தில் மயக்கமடைந்த நிலையில் உயிருக்குப் போராடியது.

Image result for Seagull Swallows Rabbit Whole

ஆனால் கடல்புறா அதனை விடாமல் அடுத்த சில நொடிகளில் உயிரோடு இருந்த முயல்குட்டியை  முழுமையாக விழுங்கியது. இதனை கண்ட ஐரின், கடல் புறாக்கள் மீன்களை மட்டுமே உணவாக உண்ணும் என்ற தனது நம்பிக்கையை சீகல் தகர்த்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |