தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை ? தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை அவ்வளவு இருக்கிறது. இந்த அரசாங்கத்தை எதிர்த்து செய்வதற்கு பயந்து கொண்டு, சபாநாயகர் தான் தெளிவாக சொல்லிவிட்டார், அது என்னுடைய அதிகாரம் என்று…
நான் எம்எல்ஏவாக இருந்தபோது, எனக்கு முன்வரிசியில் சீட்டு வேண்டும், நான் கட்சியினுடைய எம்எல்ஏ என்று கேட்டபோது, அந்த நாலு வருடமே சபாநாயகர் முடிவெடுக்காமல் இழுத்தெடுத்தார். அதனால் அங்கு நடப்பதெல்லாமே அவருடைய அதிகாரம், அது எல்லோருக்கும் தெரியும். அதை போய் நீங்கள் கேள்வி கேட்க முடியாது, அவர்தான் தெளிவாக பதில் சொல்லிவிட்டார்.
அதை ஏற்றுக்கொண்டு சபைக்குப் போக வேண்டும் தானே, இதற்கு உண்ணாவிரதம், மக்கள் பிரச்சினை எல்லாம் விட்டுவிட்டு… தங்களை காப்பாற்றிக்கொள்ள உண்ணாவிரதம், சீட்டு இல்லை என்றால் உண்ணவிரதம் செய்யுறாங்க. அரசியல்வாதியாக எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அவருடைய செயல்பாடுகள்…அரசியல்வாதிகள் தானே, வாக்கு வங்கி அரசியல் எல்லாம் பார்ப்பார்கள், மிகவும் சென்சிடிவ் ஆன விஷய. இரண்டு பேருமே கையெடுத்து கும்பிட்டு விட்டு அவர்களிடம் கொடுக்க சொல்லிவிடுவார்கள் அதுதான் நடக்கும் என தெரிவித்தார்.