செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்கள் ஆட்சியில் தலைவர் காலத்திலிருந்து, அம்மா காலத்தில் இருந்து எல்லா காலத்திலும் பொங்கல் பரிசு கொடுத்தோம். உருகிய வெல்லம் கொடுத்தோமா அல்லது பப்பாளி விதையை கொடுத்தமா, பூச்சி உள்ள பச்ச அரிசி கொடுத்தோமா ? சின்ன கரும்பு துண்டு கொடுத்தோமா ? பெரிய கரும்பு தானே கொடுத்தோம் நாங்க. அப்படி இருக்கும் போது நீங்கள், திறமை இல்லை என்பதை அரசுக்கு…
ஒரு நிர்வாக அனுபவம் இல்லாத அரசுக்கு… முழுமையான ஒப்புதல் வாக்குமூலமாக தான் திரு ஏவா வேலுனுடைய அறிக்கை இருக்கிறது, வெக்கம். இதைவிட ஒரு வெட்கம் எதுவும் இல்லை. கவர்மெண்ட் மிஷினரியை வைத்துக்கொண்டு அதையெல்லாம் சரிபார்த்து மக்களுக்கு கொடுக்க லாயக்கு இல்லை என்பது அவரே ஒத்துக் கொள்கிறார், அதைத்தான் நான் சொல்ல முடியும்.
இப்போது கரும்பை பொறுத்தவரையில் எவ்வளவு விவசாயிகள் ? அவர்கள் எல்லாம் நம்பி பயிரிட்டார்கள். அந்த விவசாயிகள் இன்றைக்கு பாவம் எங்கே கொண்டு போய் கரும்பை கொட்டுவார்கள் ? அவ்வளவு பெரிய விளைச்சல் செய்துவிட்டு, இப்போது கரும்பை விற்க முடியாமல் இருக்கிறார்கள்.
அவர்கள் கூட இருக்கின்ற தோழமைக் கட்சி அவர்களே இன்றைக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்கள், எப்படியோ வாயை திறந்து விட்டார்கள், ரொம்ப பிரச்சனை எல்லாம் இருக்கிறது. அதற்கு எதுவும் சொல்லவில்லை. இதற்கு மட்டும் என்ன செய்திருக்கிறார்கள் ? கரும்பு கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மிகவும் இரக்கமாக சொல்கிறார்கள். சத்தமாக சொல்ல வேண்டியது தானே… சத்தமாக சொல்ல மாட்டார்கள் என தெரிவித்தார்.