Categories
தேசிய செய்திகள்

“பிப்ரவரியில் பொறியியல் கல்லூரிகள் திறப்பு”… பல்கலை அதிரடி..!!

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 18 முதல் 21 வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து இவர்களுக்கு மே 24-ஆம் தேதி செய்முறைத் தேர்வும், ஜூன் 2 எழுத்து தேர்வும் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.

நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் என்றும், ஏப்ரல் 15ஆம் தேதி செய்முறை தேர்வும், ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் எழுத்து தேர்வும் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |