Categories
மாநில செய்திகள்

ரஜினிகாந்த் வீட்டின் முன்பு…. ரசிகர் தீக்குளிக்க முயன்றதால்…. பரபரப்பு…!!

அரசியலுக்கு வர வலியுறுத்தி ரசிகர் ஒருவர் ரஜினி வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த “இப்ப இல்லன்னா வேற எப்பவும் இல்லை என்று கூறி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறி வந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் கடும் சந்தோஷத்தில் இருந்தனர். இது பல அரசியல் கட்சியினருக்கு பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து அண்ணாத்த படப்பிடிப்பின் போது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் தான் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இதனால் தான் வேதனையில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ரசிகர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றி விட்டதாக கூறி மன்னிப்பு கேட்டார். அவருடைய இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் சில ஆதரவு தெரிவித்தன. மேலும் அவருடைய பல ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு “எழுந்து வா தலைவா” என்று கோஷமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சமூக வலைதளங்களிலும் ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போயஸ் கார்டனிலுள்ள ரஜினி வீட்டின் முன்பு முருகேசன் என்பவர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து அங்கிருக்க காவல்துறையினர் அவரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அவர் உடலில் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதே போன்று விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(34) என்பவரும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற விரக்தியில் நேற்று உயிரிழந்தார். இவ்வாறு ரஜினி ரசிகர்கள் பல்வேறு உணர்ச்சிபூர்வமான செயல்களில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |