தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தினால் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணி மேற்கொள்ள படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்து ஊரடங்கு காலத்தில் முக்கியமான பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது
அது என்ன என்றால் தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணி மேற்கொள்ளபடாது என பதிவு துறை அறிவித்துள்ளது. அதன்படி மே 24ஆம் தேதி வரை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்படாது. சில அத்தியாவசிய பணிகள் சார்ந்த துறைகள் தவிர பிற துறை அரசு அலுவலகங்கள் இயங்காது என அரசு அறிவித்துள்ளதால் பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்க அனுமதி வழங்கப்படவில்லை.