இப்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இதை பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா நோயாளிகளை ஆம்புலன்சில் ஏறி காத்திருக்க வைக்கக் கூடாது. நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.