Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில்…. மீண்டும் தொடங்கிய சத்துணவு திட்டம்…. மாணவர்கள் மகிழ்ச்சி…!!

அரசுப்பள்ளிகளில் மத்திய உணவு வழங்கும் திட்டம் நேற்று முதல் புதுச்சேரியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மதிய உணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. இதனால்  மாணவர்களுக்கு வீடுகளுக்கு அரிசி, பருப்பு, முட்டை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா வந்து ஒரு வருடம் கழிந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்க துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து புதுச்சேரி அரசு பள்ளிகளில் நேற்று முதல் அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதை தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநரின் ஆலோசகர்களாக சந்திரமௌலி, மகேஸ்வரி, ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் மதிய உணவு குழந்தைகளுக்கு தரமானதாக வழங்கப்படுகிறதா? என்பதை அறிய வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் அதை வாங்கி சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவு பொருட்களின் தரத்தை ஆராய்ந்த அவர் குழந்தைகளுக்கு தரமான உணவை செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |