Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 21…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 21

கிரிகோரியன் ஆண்டு : 355_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 356_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 10 நாட்கள் உள்ளன.

 

இன்றைய தின நிகழ்வுகள்: 

69 – வெசுப்பாசியான் உரோமைப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.

1124 – இரண்டாம் இனோரியசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1768 – நேப்பாள இராச்சியம் தோற்றுவிக்கப்பட்டது.

1832 – எகிப்தியப் படையினர் உதுமானியர்களை கொன்யா பொரில் தோற்கடித்தனர்.

1872 – சலஞ்சர் ஆய்வுப் பயணம் இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்தில் இருந்து ஆரம்பமானது.

1902 – இலங்கையில் பூர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.[1]

1907 – சிலியப் படையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட குறைந்தது 2,000 சுரங்கத் தொழிலாளர்களைப் படுகொலை செய்தனர்.

1910 – இங்கிலாந்தில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 344 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1913 – உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் புதிர் “நியூயோர்க் வேர்ல்ட்” பத்திரிகையில் வெளியானது.

1919 – அரசியல் எதிர்ப்பாளர் எம்மா கோல்ட்மன் என்ற அமெரிக்கர் உருசியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.

1923 – ஐக்கிய இராச்சியமும் நேப்பாளமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

1937 – உலகின் முதலாவது முழு-நீள இயங்குபடம் ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் வெளியிடப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்துக்கும் யப்பானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1946 – சப்பான், நான்கைடோ என்ற இடத்தில் 8.1 Mw அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1963 – சைப்பிரசில் துருக்கியர்களுக்கு எதிரான போராட்டம் தொடங்கியது.

1965 – அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை அறுமுகப்படுத்தப்பட்டது.

1967 – உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிசு நாசுகான்சுகி என்பவர் சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார்.

1968 – சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.

1970 – எப்-14 போர் விமானத்தின் முதலாவது பறப்பு மேற்கொள்ளப்பட்டது.

1973 – அரபு-இசுரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.

1979 – ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கையெழுத்திடப்பட்டது.

1988 – இசுக்காட்லாந்தில் லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.

1988 – உலகின் மிகப்பெரிய வானூர்தி அன்டனோவ் ஏ.என் 225 மிரியா பறக்க விடப்பட்டது.

1991 – கசக்ஸ்தானில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

1992 – இடச்சு விமானம் பாரோ விமான நிலையத்தில் மோதியதில் 56 பேர் உயிரிழந்தனர்.

1995 – பெத்லகேம் நகரம் இசுரேலியர்களிடம் இருந்து பாலத்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

2004 – ஈராக் போர்: ஈராக்கின் மோசுல் நகரில் அமெரிக்கப் படைகள் மீதான தற்கொலைத் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

2007 – பாக்கித்தானில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய தின பிறப்புகள்:

1118 – தாமஸ் பெக்கெட், ஆங்கிலேய ஆயர், புனிதர் (இ. 1170)

1550 – மான் சிங், முகலாயப் படைத்தலைவர் (இ. 1614)

1804 – பெஞ்சமின் டிஸ்ரைலி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1881)

1871 – நா. கதிரைவேற்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1907)

1890 – ஹெர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1967)

1892 – ரெபெக்கா வெஸ்ட், ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 1983)

1898 – இரா சுப்பிரேகு போவன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1973)

1920 – தெ. வ. இராசரத்தினம், இலங்கை வழக்கறிஞர், நீதிபதி, அரசியல்வாதி (இ. 1994

1921 – ஆர். உமாநாத், தமிழக இடதுசாரி அரசியல்வாதி (இ. 2014)

1932 – உ. இரா. அனந்தமூர்த்தி, இந்தியக் கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 2014)

1937 – பண்ருட்டி இராமச்சந்திரன், தமிழக அரசியல்வாதி

1942 – கூ சிங்தாவ், சீனாவின் 6வது அரசுத்தலைவர்

1947 – பாக்கோ தே லூசீயா, இசுப்பானிய கித்தார் இசைக்கலைஞர் (இ. 2014)

1948 – ஈ. வெ. கி. ச. இளங்கோவன், தமிழக அரசியல்வாதி

1948 – சாமுவேல் எல். ஜாக்சன், அமெரிக்கநடிகர், தயாரிப்பாளர்

1949 – தோமசு சங்காரா, புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (இ. 1987)

1954 – கிரிசு எவர்ட், அமெரிக்க டென்னிசு வீரர்

1959 – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தமிழக துடுப்பாட்ட வீரர்

1963 – கோவிந்தா, இந்தித் திரைப்பட நடிகர், பாடகர், அரசியல்வாதி

1967 – மிக்கைல் சாக்கஷ்விலி, ஜார்ஜியாவின் 3வது அரசுத்தலைவர்

1972 – ஜெகன் மோகன் ரெட்டி, இந்திய அரசியல்வாதி

1977 – இம்மானுவேல் மாக்ரோன், பிரான்சின் அரசுத்தலைவர்

1985 – ஆண்ட்ரியா ஜெரெமையா, இந்தியப் பின்னணிப் பாடகி, நடிகை

1989 – தமன்னா, இந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள்:

72 – தோமா (திருத்தூதர்), உரோமைப் புனிதர் (பி. 1)

1597 – பீட்டர் கனிசியு, டச்சு மதகுரு, புனிதர் (பி. 1521)

1940 – எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1896)

1942 – பிராண்ஸ் போவாஸ், செருமானிய-அமெரிக்க மானிடவியலாளர் (பி. 1858)

1975 – கோவை அய்யாமுத்து, தமிழக எழுத்தாளர், காந்தியவாதி (பி. 1898)

1986 – சோமசுந்தரம் நடேசன், இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1904)

1988 – நிக்கோ டின்பெர்ஜென், நோபல் பரிசு பெற்ற டச்சு ஆங்கிலேய மருத்துவர் (பி. 1907)

1998 – துரை விஸ்வநாதன், ஈழத்து பதிப்பாளர், தொழிலதிபர் (பி. 1931)

2006 – வரதர், ஈழத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர் (பி. 1924)

2008 – கே. இந்திரகுமார், ஈழத்து எழுத்தாளர், நடிகர்

2010 – ஈழத்துப் பூராடனார், ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் (பி. 1928)

2011 – பி. கே. அய்யங்கார், இந்திய அணு அறிவியலாளர் (பி. 1931)

2015 – சார்வாகன், தமிழகத் தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (பி. 1929)

2018 – பிரபஞ்சன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (பி. 1945)

இன்றைய தின சிறப்பு நாள்:

சங்கமித்தை நாள் (தேரவாத பௌத்தம்)

Categories

Tech |