Categories
உலக செய்திகள்

ரூ 7,00,00,000-க்கு கார் பார்க்கிங் விற்பனை…. அதிர்ச்சியில் ஆழ்த்திய தொழிலதிபர்..!!

பிரபல தொழிலதிபர் தனக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தினை ரூ. 7 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

உலகளவில் மக்கள் மத்தியில் வீடு, நிலம் வாங்குவதில் பெரும் போட்டி நிலவுகிறது. அதன் விளைவுதான் ஹாங்காங்கில் யாரும் நினைத்துக்கூடப் பார்க்காத சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழிலதிபர் ஜானி சியுங் ஷுன் யீ (Johnny Cheung Shun-yee) தனக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடம் இடத்தினை ரூ.7 கோடிக்கு விற்பனை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Image result for Hong Kong might be heading for recession after months of violent protests but that hasn't stopped one businessman from forking out almost $1 million or about ₹7 crore for a parking spot.

ஹாங்காங்கில் மிக விலை உயர்ந்த 79 அடுக்குமாடிக் கட்டடமான தீ சென்ட்ரல் கோபுரத்திற்கு நேராக வாகன நிறுத்துமிடம் அமைந்துள்ள காரணத்தினாலே அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. ஜானி ஏற்கனவே அதே பகுதியில் மூன்று காலி இடங்களை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜானி விற்பனை செய்துள்ள இடத்தில் நிற்கப்போகும் வாகனத்தின் உரிமையாளர்தான் உலகிலேயே அதிக விலையான இடத்தில் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளது என்பதில் பெருமை கொள்வார்.

Categories

Tech |