உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டில் லியான்னிங் மாகாணத்தில் ஷென்யான் பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் அந்த தெருவில் உள்ள மற்ற கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது. மேலும் கரும் புகையானது விண்ணை முட்டும் அளவிற்கு வெளியேறியுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கும் இங்குமாக பதறியடித்துக் கொண்டு ஓடிய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தினால் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.