இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை விரிவு படுத்தி வருகிறது. கடந்த 2 வரமாக இந்தியாவிலும் கொரோனாவில் வீரியம் மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். ஆனாலும் மத்திய மாநில அரசு கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை தூரிதப்படுத்தி வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு 33 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.