இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை (21 நாட்கள்) ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது; 17 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கையும் 166 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதில் 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.