இந்தியாவில் கடந்த 24 மணிக்கு நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4067 பேரில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தகவல் அளித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 100ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபபட்டவர்களில் 290 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனோவால் உயிரிழந்தவர்களில் 76 சதவிகிதத்தினர் ஆண்கள், 63 சதவிகித்தினர் 60 அதிகமான முதியவர்கள், 37 சதவிகித்தினர் 60 வயதுக்கு குறைவானவானவர்கள், 24 சதவீதம் பெண்களுக்கும் மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 47 சதவிகிதத்தினர் 40 வயதிற்கும் குறைவானவர்கள், 37 சதவிகிதத்தினர் 40 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.