இந்தியா முழுவதும் வங்கிகளுக்கான கட்டண சேவையை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய தேசிய வங்கியாக இருந்தாலும் சரி அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்குள் இயங்கக்கூடிய வங்கியாக இருந்தாலும் சரி, குறைந்தபட்ச நிலுவை தொகையை பராமரிப்பது மற்றும் பணத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் வங்கி சேவை கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக்சிஸ் வங்கி, கொடாக் மகேந்திரா, மகாராஷ்டிரா வங்கி, ஆர்.பி.எல் ஆகிய வங்கிகளில் குறைந்தபட்ச நிலுவை தொகை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது