ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக என்று முதல்வர் பழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. எனவே தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் கூறும் விமர்சனங்களுக்கு ஆளும் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை கோனியம்மன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்து பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளார்.
இதையடுத்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசுதான் என்றும், மக்களுக்கு நல்லதே செய்யாமல் அதிமுகவை விமர்சனம் செய்வதற்காகவே கிராம சபை கூட்டம் நடத்தும் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் என்று கூறி மக்களை திசை திருப்பும் நாடகம் நடத்தி வருகிறார்” என்றும் கூறியுள்ளார்.