ஐபிஎல் தொடரில் அதிகமான வருமானம் ஈட்டிய வீரர்களின் பட்டியலில் இடம்பெறுபவர்கள் இவர்கள் தான்.
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் அதிக வருமானம் ஈட்டிய முதல் வீர்ர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் மூலம் ரூ.137.8 கோடி ஊதியமாக பெற்றுள்ளார். அடுத்த சீசனில் ரூ.15 கோடி ரூபாயும் சேரும்போது, அவர் ஐபிஎல் மூலம் ரூ.15 கோடி சம்பளம் பெற்ற முதல் வீரராக இருப்பார். அவருக்கு அடுத்தபடியாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரூ.131.16 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ரூ.125.2 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.