Categories
உலக செய்திகள்

திருமண விழாவில் தீவிபத்து… 11 பேர் பலி… 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

ஈரான் நாட்டில் திருமண விழாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஈரான் நாட்டில் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாக்கஸ் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில், திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 நபர்கள் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் விரைவாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Image result for Eleven killed, over 30 Injured in fire caused by gas blast ...

இதுகுறித்து காவல் ஆய்வாளர் கூறுகையில்,” திருமணத்திற்கு வந்த 11 விருந்தாளிகள் உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், மூன்று நபர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றார்.

Categories

Tech |