நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு எவ்வித தளர்வுகளும் இல்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை 13 மண்டலங்களாக பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் மற்றும் நகராட்சியினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தனிமைப்படுத்தப்பட்டபகுதிகளில் எவ்வித தளர்வுகளும் கிடையாது என நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் எந்த வித கடைகளும், அலுவலகங்களும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதர பகுதிகளில் இருக்கும் காய்கறி மற்றும் மளிகை கடைகளை காலை 6 மணி முதல் 5 மணி வரை திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் கடைக்கு செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.