Categories
உலக செய்திகள்

கடலில் சிக்கி தவித்த அகதிகள்… விடிய விடிய போராடிய கடலோர காவல்படை… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

இத்தாலியில் கடலோர காவல்படையினர் கடலில் சிக்கி தவித்த 396 அகதிகளை மீட்க விடிய விடிய போராடியுள்ளனர்.

சிசிலி தீவு அருகே மோசமான வானிலை காரணமாக ஐரோப்பா நோக்கி வந்து கொண்டிருந்த அகதிகள் படகானது ஆழம் குறைவான பகுதியில் திடீரென சிக்கியுள்ளது. இந்த சம்பவத்தை கண்ட கடலோர காவல்படையினர் சிறிய படகுகள் மூலம் ஆழம் குறைவான பகுதியில் சிக்கி தவித்த 396 அகதிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மீட்பு பணியானது விடிய விடிய நடந்துள்ளது. மேலும் இந்த வருடம் அகதிகளாக இத்தாலிக்கு வருவோரின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |