ஜப்பானில் புதிய வகை குட்டி ஸ்கூட்டர்கள் காற்றடைத்து ஓட்டி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் புதிய வகை குட்டி ஸ்கூட்டர்கள் காற்றடைத்து ஓட்டி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஹிரோகி சட்டோ என்பவர் பொய்மோ ( POIMO ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளார். மேலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சூட்கேஸ் வடிவில் இருப்பதால் இதனை கைகளிலேயே எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.
அதோடு மட்டுமில்லாமல் பலூனுக்கு காற்றடிப்பது போல் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தேவைப்படும் இடத்தில் காற்றடித்து பயன்படுத்திக்கொள்ளலாம். அதேசமயம் இந்த சூட்கேஸ் ஸ்கூட்டர் தற்போது சுமார் 1 1/2 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தும் வகையிலும், மணிக்கு 15 கிலோ மீட்டர் செல்லும் வேகத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.