ஒரு பணம் செலவில்லாமல் பான் கார்டை உடனே பெற எப்படி விண்ணப்பிப்பது என்று இப்போது பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் எல்லோரும் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு வைத்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த இரண்டு அட்டைகளும் இல்லாமல் எந்த ஒரு நிதி பணபரிவர்த்தனையும் செய்ய முடியாது. ஆதார் அட்டையை கொண்டு பான் கார்டு சில நிமிடங்களில் வழங்கப்படும். இதில் பத்து இலக்க எண் ஒன்று இருக்கும். இது வருமான வரித்துறை வெளியிடும். உடனடி PAN வசதியின் கீழ் ஆதார் அட்டை மூலம் e-pan அட்டை யை வழங்க சுமார் பத்து நிமிடங்கள் மட்டும் தான் ஆகும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்த வசதியின் மூலம் சுமார் 7 லட்சம் வரையிலும் PAN அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. NSDL மற்றும் UTITSL மூலம் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் இந்த வசதிக்காக அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றனர். இதற்கு மாறாக நாம் வருமான வரித்துறை போர்டல் மூலம் பான் கார்டு பெற்றால் எந்த கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. பான் கார்டு அட்டைக்கு விண்ணப்பிப்பவருக்கு PDF வடிவத்தில் PAN அட்டை கிடைக்கும்.
இது ஒரு QR code கொண்டிருக்கும். இதில் நம் புகைப்படம், பிறந்த தேதி, பெயர் மற்றும் முக்கியமான தகவல்கள் இருக்கும். முதலில் e-pan பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்பித்து முடிந்ததும் 15 இலக்க பதிவு எண் கிடைக்கும். மேலும் பான் அட்டையில் மென்மையான நக்கலும் நம்முடைய மெயிலுக்கு அனுப்பப்படும்.
பான் கார்டு இலவசமாக பெறுவதற்கான வழி:
1.முதலில் http://www.incometaxindiaefilling.gov.in/home க்கு செல்ல வேண்டும்.
2.உங்கள் இடது பக்கத்தில் உள்ள instant PAN through Adhar என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3.அதன் பிறகு ஒரு புதிய பக்கம் ஓபன் செய்யப்படும். அங்கு get new PAN கிளிக் செய்யவும்.
4.இப்போது புதிய பக்கத்தில் ஒரு ஆதார் அட்டை எண்ணை உள்ளீடு மாறு கேட்கப்படும். உங்கள் ஆதார் எண்ணை இங்கே உள்ளிட வேண்டும். பின்னர் I Conform என்பதை தட்டவும்.
5.உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போனில் OTP வரும். அதை தளத்தில் வைத்து சரிபார்க்கவும்.