Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 15 மாதத்தில்…! ”ரூ.3,000,00,00,000” தட்டி தூக்கிய DMK அரசு செம மூவ் …!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், இந்து சமய அறநிலையத்துறையே வேண்டாம் அப்படின்னு சிலர் சொல்லுறாங்க.  அந்தத் துறை வேண்டியது இல்லை. அந்தத் துறையை எடுத்துட்டு, அதை எங்களிடம் ஒப்படைச்சிருங்க என்று சாமியார்களின் கூட்டம்   கோஷம் போட்டுக் கொண்டிருக்கு. சாமியார் கூட்டத்தில் ஒப்படைத்தால் அது என்ன கதிக்கு ஆளாகும் ? அப்படிங்கறது எல்லோருக்கும் தெரியும்.

தமிழ்நாட்டில் உள்ள சாதனைகளில் இதுவும் ஒரு சாதனை. கடவுள் மேல நம்பிக்கை இருக்கா ? நம்பிக்கை இல்லையா ? அது வேற விஷயம். அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. அது அவரவர்களுடைய எண்ணங்களை பொறுத்தது. ஆனாலும் தமிழகத்தில் இருக்கிற ஆலயங்கள்,  பெரிய ஆலயமாக இருக்கலாம், சின்ன ஆலயமாக இருக்கலாம், இவையெல்லாம் முன்னோர்கள் உருவாக்கியது. மன்னர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். வசதி வாய்ப்பு படைத்தவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

கோவில்களை மட்டுமல்ல,  கோவிலுக்கு ஏராளமான ஆவணங்கள், அதற்குரிய சொத்துக்கள், நிலங்கள், சாகுபடி நிலங்கள் என்று ஏராளமாக இருக்கிறது. இவை தனிப்பட்ட நபர்கள் பயன்படுத்திவிட கூடாது. அதை தொடர்ந்து கட்டி காப்பாற்றப்பட வேண்டும் என்கிற முறையில் தான் இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்யப்பட்டு,  ஒரு தனி துறையாக உருவாக்கி, அதற்கென்று ஒரு தனி அமைச்சரையும் நியமித்திருக்கிறார்கள்.

நம்முடைய அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு,  பலரும் தவறான முறையில் அபகரித்து வைத்திருந்த நிலங்களை எல்லாம் மீட்டு, ஏறத்தாழ 1200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை மீட்டு..  அதனுடைய சொத்து மதிப்பே  கிட்டத்தட்டமூவாயிரம் கோடி. இதையெல்லாம் ஒரு 15 மாதத்தில் மீட்கப்பட்டிருக்கிறது, இந்து சமய அறநிலைத்துறைக்கு சேர்க்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |