Categories
தேசிய செய்திகள்

வெறும் 5 நாட்களில்…. PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா…? இதை செய்தால் போதும்…. வீட்டிற்கே வந்து விடும்…!!

புதிய PVC ஆதார் அட்டையை பெறுவது எப்படி என்ற வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணம் ஆகும். இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை இந்த ஆதார் அட்டை வழங்குகிறது. ஆதார் கார்டு என்பது முக்கியமான ஒரு ஆவணமாகும். முதன்முதலில் வழங்கப்பட்ட ஆதார் கார்டு அட்டை தாளால் ஆனது. தற்போது இதற்கு மாற்றாக PVC ஆதார் கார்டு வந்து விட்டது. நீங்கள் புதிய வகையிலான பிவிசி அட்டைகளை வாங்கி விட்டீர்களா? அதை எப்படி வாங்குவது என்பது குறித்து இங்கே காணலாம்.

இந்த PVC ஆதார் கார்டில் டிஜிட்டல் கையொப்பம், ஹாலோகிராம், கோஸ்ட்படம் ஆகியவை பாதுகாப்பான அம்சங்கள் உள்ளன. இதை கிரெடிட் கார்டு மாதிரி உங்கள் பர்ஸிலேயே வைத்துக்கொள்ளலாம்.  இதனை பெறுவதற்கு ரூபாய் 50 கட்டணமாக செலுத்தி அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

வழிமுறைகள்:

முதலில் UIDAI வலைதளமான https://residentpvc.uidai.gov.in /order-pvcreprint என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

முகப்பு பக்கத்தில் ஆதார் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர் GET என்ற ஆப்சனுக்கு கீழ் ஆர்டர் pvc ஆதார் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை/ 28 இழக்க ஈஐடி எண்ணைஉள்ளிடவும் .

பின்னர் பாதுகாப்பு குறியீடு அல்லது கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

உங்களுடைய செல்போனுக்கு ஓடிபி நம்பர் வரும். அந்த OTPயை நீங்கள் பதிவு செய்த செல்போன் எண்ணில் நீங்கள் பெற்ற OTPயை உள்ளிடவும்.

பின்னர் எல்லா நிபந்தனைகளையும் சரிபார்த்து சமர்ப்பி என்ற ஆப்ஷனை கிளிக்.

கடைசியாக கட்டணத்தை விருப்பத்தை தேர்வு செய்து தேவையான தொகையை செலுத்த வேண்டும்.

உங்கள் கட்டண முடிந்ததும் 5 நாட்களுக்குள் புதிய PVC ஆதார் கார்டு ஸ்பீட் போஸ்ட் மூலமாக வீட்டிற்கு வந்து சேரும்.

Categories

Tech |