திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்துள்ள குணகரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரது மகள் ரேணுகாதேவி.. 32 வயதுடைய இவருக்கு பெற்றோர் பல இடங்களில் மாப்பிள்ளை தேடி பார்த்தும் திருமணம் நிச்சயமாகவில்லை.
தனக்கு திருமணம் ஆகவில்லையே என்று ரேணுகாதேவி கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு தன்னுடைய உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ பற்ற வைத்து கொண்டார்.
இதில் தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடிக்க, அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்து பார்த்தனர்.. ஆனால் அதற்குள் ரேணுகாதேவி உடல் கருகி பரிதாபமாக பலியானார்..
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சுங்குவார்சத்திரம் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரேணுகாதேவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.