Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மக்கள் குறைதீர்க்க ஓடோடி வருவேன் “காஞ்சிபுர அதிமுக வேட்பாளர் அசத்தல் பேச்சு !!..

ஒரே ஒரு குரல் கொடுத்தால் போதும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஓடோடி வருவேன் என்று கூறி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தது காஞ்சிபுரம் பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

காஞ்சிபுரம் மக்களவை தேர்தல்  அதிமுக வேட்பாளர் மரகதம்குமரவேல் காஞ்சிபுர மேற்கு மாவட்ட  பகுதிகளில் கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் இரட்டைஇலைக்கு வாக்குகள் சேகரித்து வந்தார் .

அப்போது பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது ,பிரச்சனை என்று மக்கள் கூப்பிடும் பொழுது  கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மக்கள் குறைகளை சரிசெய்வேன் என்று அவர் கூறினார் . மேலும் மத்திய மாநில அரசின் திட்டங்கள் ஏழை மக்களிடம் கொண்டு சேர்க்க  பாடுபடுவேன் என்று கூறி வாக்கு சேகரித்து வந்தார் .

மேலும் முன்னாள் அமைச்சரான வி.சோமசுந்தரம், அதிமுக நிர்வாகிகள், பாமக தேமுதிக பாஜக த. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்  ஆகியோர் வேட்பாளருடன் சேர்ந்து சென்று வாக்கு சேகரித்தனர்.

 

Categories

Tech |