Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை வென்ற கர்ப்பிணிப்பெண்… அழகான ஆண் குழந்தை பிறந்தது!

கேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஓரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

வளைகுடா நாட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி கேரளா வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அவரது நிறைமாதக் கர்ப்பிணி மனைவிக்கும்  கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து இருவரும் கண்ணூரில் இருக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் இருவருமே பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். அதைத் தொடர்ந்து அப்பெண் 2 நாட்கள் கழித்து 11 ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது தாய் மற்றும் சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக கூறிய மருத்துவர்கள்,இருப்பினும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |