Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் எதிர்க்கட்சித் தலைவராக… காங்கிரசை சேர்ந்த வி.டி.சதீசன் நியமனம்…!!!

கேரள மாநிலத்தில் எதிர்க்கட்சி தலைவராக வீட்டில் வி.டி.சதீசன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.

கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கேரளாவின் முதல்வராக பினராய் விஜயன் நேற்று முன்தினம் பதவியேற்றார். இதைதொடர்ந்து 20 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசை சேர்ந்த வி.டி.சதீசனை காங்கிரஸ் தலைமை நியமனம் செய்துள்ளது.

ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராக ரமேஷ் சென்னிதலா இருந்த நிலையில் தற்போது இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவராக வி.டி.சதீசன் பொறுப்பேற்றதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் வி.டி.சதீசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |