கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். தென்மேற்கு பருவமழை காரணமாக 4 மாதங்களில் நாட்டில் பல பகுதிகளில் மழை பொழிவு இருக்கும். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை நடப்பு ஆண்டு சற்று தாமதமாகவே துவங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வட இந்தியாவில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வழக்கமான ஆண்டை போல இந்த ஆண்டும் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.