கோவையில் திருமணத்துக்கு நோ சொன்ன கள்ளக்காதலியை அடித்து கொலை செய்த, கோழிக்கடைக்காரர் காவல்துறையினருக்கு பயந்து போய் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை காளப்பட்டி நேருநகர் 6ஆவது வீதியை சேர்ந்த 37 வயதுடைய பத்மநாபன் என்பவர் அந்தப்பகுதியில் கோழி இறைச்சிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு கல்யாணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பத்மநாபனை விட்டுவிட்டு அவரது மனைவி, 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அதேபோல அதேப்பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருடைய மனைவி திலகவதி.. 33 வயதான திலகவதி கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததுடன், அப்பகுதியில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த சூழலில் தான் பத்மநாபனும், திலகவதியும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.. இதனால் அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் வீட்டிலும் யாரும் இல்லாத காரணத்தால் பல நாட்களாக இருவரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் தன்னை திருமணம் செய்து கொள் என்று பத்மநாபன், திலகவதியை கட்டாயப்படுத்தியுள்ளார்.. ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையறிந்த பத்மநாபன் மற்றும் திலகவதியின் உறவினர்கள் தலையிட்டு, இருவரும் இனி சந்திக்கவே கூடாது என்றும், அவரவர் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள்.. அதை இருவரும் ஏற்றுக்கொண்டு சென்றனர். ஆனாலும் அதனை மதிக்காமல் அவர்கள் இருவரும் மீண்டும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்..
காளப்பட்டி சாலையிலுள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள ஒரு அறையில் பத்மநாபன் தன்னுடைய நண்பர்களுடன் அடிக்கடி கேரம்போர்டு விளையாடி பொழுதை போக்குவது வழக்கம். அந்த அறையில்தான் பத்மநாபன் திலகவதியை சந்திப்பார்.. இந்நிலையில் நேற்றும் திலகவதியை அந்த அறைக்கு அவர் அழைத்து வந்துள்ளார்.
அங்கு வந்ததும் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி மீண்டும் திலகவதியிடம் கூறியுள்ளார். ஆனால் அதேபதிலை (முடியாது) தான் அவர் கூறி மறுத்துள்ளார்.. இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, பலமுறை கூறியும் அவர் திருமணத்துக்கு நோ மட்டுமே சொன்னார்.. சம்மதிக்கவில்லை என்பதால் பத்மநாபன் கடும் கோபமடைந்து விட்டார்..
பின்னர் ஆத்திரமடைந்த பத்மநாபன் அங்கு கிடந்த சம்மட்டியை எடுத்து திலகவதியின் தலையில் ஓங்கி வேகமாக அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.. இதனைப்பார்த்து அதிர்ச்சிடைந்த அவர், செய்வதறியாமல் திகைத்த்துப்போய், போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று பயந்து, அந்த அறையிலேயே வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பீளமேடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிணமாக கிடந்த பத்மநாபன் மற்றும் திலகவதி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..