அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தவிர்த்து பிற நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைகளும், சுகாதார சேவைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான சேவைகளும் சீராக இயங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் தற்போது, கொரோனவள் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல, 195 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,373 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, கடந்த 24 மணி நேரத்தில் 1,020 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர். இதுவரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 11,707 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் மீட்பு விகிதம் 27.41% ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி இன்று ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாததை விட அதிகம்.
அதற்கு விளக்கம் அளித்துள்ள அவர், ” சில மாநிலங்களில் இருந்து கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கைகள் சரியான நேரத்தில் எங்களுக்கு கிடைப்பதில்லை. எனவே அவர்களிடம் கொரோனா பாதிப்பு நிலவரத்தை விளங்குமாறு சுகாதாரத்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தற்போது கொரோனா விவரங்கள் சரியான நேரத்தில் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக தான் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது” என கூறியுள்ளார்.