ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற நவகாடல் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒருவன் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஜுனைத் அஷ்ரப் கான், மற்றொருவன் புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் அகமது ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என டிஜிபி தெரிவித்துள்ளார்.
ஜுனைத் அஷ்ரப் கான் என்பவன் ஹுரியத் அமைப்பின் தலைவர் முகமது அஷ்ரப் கானின் இளைய மகன் ஆவான். அதேபோல, மற்றொரு பயங்கரவாதியான தாரிக் கடந்த மார்ச் மாதம் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் கடந்த மார்ச் மாதம் சேர்ந்துள்ளான். இவன் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஆகும். அதேபோல தாரிக் ஹிஸ்புல் முஜாஹிதீனின் பிரதேச தளபதியாக இருந்துள்ளான்.
மேலும் மத்திய காஷ்மீர் பகுதியையும் கவனித்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நவகாடல் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 2 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல இன்று காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி வீரமரணம் அடைந்துள்ளார்.