ஊரடங்கு காலத்திலும் மாணவர் நலன் கருதி செயல்படும் ஆசிரியரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது மாணவர்கள் தேர்ச்சி பெற்று நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வாங்குகிற சம்பளத்துக்கு உண்மையாக வேலை பார்க்கும் படி புதிய புதிய பல செயல்கள் மூலம் புதுவிதமான கல்வியை மாணவர்களுக்கு செலுத்தி வந்தனர். இது போன்ற விஷயங்களை நாம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கண்டு வருகிறோம். இந்த ஊரடங்கு நேரத்திலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் ஒருவர் வீடு வீடாகச் சென்று தொண்டு பணி செய்து வருகிறார்.
அதாவது ஊரடங்கில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், மாணவர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர். மாணவர்களின் மனஉலைச்சலை தடுக்க, பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற ஆசிரியர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக இதனை கண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியரைப் பாராட்டி உள்ளார்.