Categories
உலக செய்திகள்

பள்ளியிலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்த சிறுவன்… திடீரென நடந்த சம்பவம்… குடும்பத்தினர் அதிர்ச்சி..!!

லண்டனில் 5 வயது சிறுவனை குடும்பத்தினர் பள்ளியிலிருந்து அழைத்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கிழக்கு லண்டனில் 5 வயது சிறுவன் ஒருவன் பள்ளியிலிருந்து தனது குடும்பத்தாருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவனை பின்தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவர் திடீரென அந்த சிறுவனை வேகமாக பிடித்து இழுத்துள்ளார். மேலும் அந்த இடத்திலிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இதனால் அதிர்ந்து போன சிறுவனின் குடும்பத்தார் இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த சம்பவத்தில் சிறுவனுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி புகைப்படத்தை கொண்டு காவல்துறையினர் அந்த இளைஞனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த இளைஞனுடைய புகைப்படத்தை வெளியிட்டு அவனுக்கு 30 அல்லது 20 வயது இருக்கும் அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிய வந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |