Categories
தேசிய செய்திகள்

வங்கியில் நோட்டமிட்டு… “10 லட்சத்தை அசால்ட்டாக தூக்கிய 10 வயது சிறுவன்…!!

மத்தியபிரதேச மாநிலத்தில் வங்கியில் புகுந்த 10 வயது சிறுவன், ரூ 10 லட்சத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் நீமுஜ் என்ற மாவட்டத்திலுள்ள ஜாவத் பகுதியில், கூட்டுறவு வங்கி ஓன்று உள்ளது. இந்த வங்கியில் இன்று பகல் 11 மணியளவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த போது, வங்கி காசாளர் (Bank Cashier) அறைக்குள் இருந்த 10 லட்சம் ரூபாய் காணாமல் போனது. இதனால், அதிர்ச்சியைடைந்து போன வங்கி நிர்வாகிகள் உடனடியாக சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்ததில் சிறுவன் ஒருவன் அலேக்காக தூக்கிச்சென்றது தெரியவந்தது.

காசாளர் கவுன்டர் முன்பாக வாடிக்கையாளர்கள் பலரும் வரிசையில் காத்திருந்த நிலையில், வங்கி காசாளர் தன்னுடைய கேபின் அறையை பூட்டாமல் பக்கத்து அறைக்கு சென்று விட்டார்.. அந்த நேரம்பார்த்து 10 வயது சிறுவன் ஒருவன் நைசாக கேஷியர் கேபின் அறைக்குள் சென்று, 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இரண்டை எடுத்து, தான் வைத்திருந்த பைக்குள் போட்டுக்கொண்டு, மின்னல் வேகத்தில் திடீரென மறைந்தான். இவையனைத்தும் வெறும் 30 நொடிகளில் அரங்கேறியுள்ளது.

அந்தசிறுவன் காசாளர் டேபிளின் உயரம் கூட இல்லாததால், வரிசையில் நின்ற யாருமே சரியாக கவனிக்கவில்லை.. இந்த சம்பவத்திற்கு முன்னதாக கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு முன்பாக 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன், வங்கிக்குள் நுழைந்து ஓரமாக காத்திருந்து, சுற்றும் முற்றும் யாரும் பார்க்கிறார்களா என நோட்டமிட்டுக் கொண்டிருந்துள்ளான்.. காசாளர் அறையை விட்டு கிளம்பிய பின் அவன் வெளியே நின்ற அந்தசிறுவனுக்கு ‛சிக்னல்’ கொடுத்ததும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அவர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |