மத்தியப் பிரதேசத்தில் போலீஸ் அதிகாரி தனது மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டுத் சரமாரியாக அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தார் (Dhar) நகரில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தில் பொறுப்பாளராக இருப்பவர் நரேந்திர சூர்யவன்ஷி. இவர் தனது மனைவியை நடுத்தெருவில் தர தரவென தள்ளி இழுத்து போட்டு தாக்குகிறார். அப்போது சக காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்துகின்றனர். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் அதிகாரி நரேந்திராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு இருப்பதாகவும் , அதனை அவரது மனைவி தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர் தனது மனைவியை தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.
Madhya Pradesh: A case of kidnapping and rape has been registered against Gandhwani Police Station Incharge Narendra Suryawanshi https://t.co/SMpypLOHjJ
— ANI (@ANI) February 13, 2020