மத்தியப் பிரதேச மாநிலத்தில் லஞ்சம் தராததால் சிறுவனின் தள்ளுவண்டிக் கடையை மாநகராட்சி அலுவலர்கள் கீழே தள்ளிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருந்த போதிலும் நாட்டில் இதுவரை மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 8 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. மேலும், நாட்டில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
இந்தநிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் சாலை ஓரத்தில் தள்ளுவண்டிக் கடையில் 14 வயதுடைய சிறுவன் ஒருவன் முட்டைகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள், அந்த சிறுவனிடம் ரூ 100 லஞ்சமாக கொடு என கேட்டு மிரட்டியுள்ளனர்.
அதற்கு அந்தச் சிறுவன் இன்னும் வியாபாரமாகாததால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளான்..இருப்பினும், பணம் தரவில்லை என்றால் இந்த இடத்தில் இனி கடை நடத்த முடியாது எனக் கூறியுள்ளனர். இதற்கு பதில் கூறிய சிறுவன், கொரோனா காலம் என்பதால் சரியாக வியாபாரம் ஆகவில்லை.. அப்படி இருக்கும் நிலையில் வியாபாரத்தில் பங்கு கேட்பது என்ன நியாயம்? என்று கேட்டுள்ளான்.
இதனால் கோபமடைந்த மாநகராட்சி அலுவலர்கள், சிறுவனின் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தள்ளு வண்டியை கீழே கவிழ்ந்து தள்ளியுள்ளனர். இதனால் முட்டைகள் அனைத்தும் சாலையில் உடைந்து கிடக்கிறது.. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கொந்தளித்து கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.. லஞ்சம் தராததற்காக தள்ளுவண்டி கடையை கவிழ்த்து சிறுவனின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
https://twitter.com/EsBeing/status/1286292984112111621