Categories
தேசிய செய்திகள்

கட்டணத்தை முழுசா கட்டுங்க… முதியவரை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதா?… விளக்கம் கொடுக்கும் மருத்துவமனை..!!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மருத்துவ கட்டணத்தை முழுமையாக செலுத்தாத காரணத்தால் மருத்துவமனை நிர்வாகம் அவரது கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் என்ற மாவட்டத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் தனது மருத்துவ கட்டணத்தை முழுமையாக செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதாவது, மருத்துவமனை நிர்வாகம் இந்த முதியவருக்கு சிகிச்சைக்கான கட்டணம் 16,000ஐ செலுத்த வேண்டும் என கூறியிருக்கிறது. அதில், முன்னதாக 5 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த முதியவரின் சார்பில் அவரது மகள் கட்டியுள்ளார்.

80-year-old MP man found tied to hospital bed allegedly over non ...

மீதமுள்ள கட்டணத்தை தங்களால் கொடுக்க இயலவில்லை என அந்த முதியவரின் மகள் மருத்துவனை நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார். அதனால், மீதமிருக்கும் 11,000 ரூபாயை கட்ட தவறியதால் முதியவரின் கை மற்றும் கால்களை கட்டிலோடு கயிற்றால் கட்டி போட்டு மருத்துவமனை நிர்வாகம் இரக்கமின்றி துன்புறுத்தியிருக்கிறது.

MP: 80-year-old man allegedly tied to bed in hospital after ...

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி, அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தெரிய வந்துள்ளது. இதனைப் பற்றி தெரிந்து அவர் மருத்துவமனையின் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

MP: 80-Yr-Old Man Allegedly Tied To Hospital Bed After Failing To ...

ஆனால் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டதாவது, அந்த முதியவருக்கு எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு இருப்பதால் அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்து விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக தான் மருத்துவமனை நிர்வாகம் அவரது கை , கால்களை கட்டி வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அந்த முதியவருக்கு மருத்துவ கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இருப்பினும் மனித உரிமை மீரலை மருத்துவமனை நிர்வாகம் கையாண்டதன் காரணமாக அவர்கள் மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |