மத்தியப் பிரதேசம் மாநிலம், சிங்ராலியா என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் ஜாதவ், மூட நம்பிக்கைகளை பெரிதளவில் நம்பி, அதனை பின்பற்றியும் வந்துள்ளார்.. இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக வீட்டில் விநோதமான பூஜை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், பிரிஜேஸ் தான் வணங்கும் குல்தேவதாவை மகிழ்விப்பதற்காக, மனைவியை கொடூரமாக கொலை செய்துதுவிட்டு, பின் சடலத்தை வீட்டுக்கு உள்ளேயே புதைத்துள்ளார்.. மேலும் அவர் தலையை மட்டும் தனியாக வெட்டி பூஜை அறையில் காணிக்கையாகப் படைத்து வழிபட்டுள்ளார்..
அதேசமயத்தில் வீட்டுக்கு வந்த பிரிஜேஸின் 2 மகன்கள், இந்த கொடூர சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.. பின் அங்கிருந்து தப்பியோடிய இருவரும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.. தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்த பிரிஜேஸை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.. இறந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.