Categories
தேசிய செய்திகள்

எதிர்பார்த்தது ஆண்குழந்தை… பிறந்ததோ பெண் குழந்தை… பெற்ற தாய் செய்த கொடூரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆணுக்கு பதில் பெண் குழந்தை பிறந்ததால் பெற்ற தாயே தன் குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் ஷஜாபூர் மாவட்டம் அம்ஹோரியா கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சு சிங்.  26 வயதான இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதற்கிடையே மீண்டும் கர்ப்பமாக  இருந்த இவருக்கு கடந்த12 ஆம் தேதியன்று (புதன்கிழமை) அம்மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து மஞ்சு தன் குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், பிறந்ததோ பெண் குழந்தை… இதனால் கடும் விரக்தியில் இருந்த மஞ்சு குழந்தையை கொல்ல நினைத்துள்ளார்.
அதன்படி,கடந்த 14-ஆம் தேதியன்று  (வெள்ளி கிழமை) குழந்தையை கொன்று விடவேண்டியது தான் என எண்ணிய அவர், பிறந்து இரண்டே நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை இரக்கமின்றி கூர்மையான ஆயுதத்தை வைத்து தலையிலும், வயிற்று பகுதியிலும் மிக கடுமையாக தாக்கியுள்ளார். இதில் குழந்தை அலறி துடித்துள்ளது.
அதை தொடர்ந்து அழுகை சத்தம் கேட்டு, அருகில் வசித்து வரும் மக்கள் மஞ்சு வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அதிர்ச்சியடைந்த அவர்கள், படுகாயமடைந்த பச்சிளம் குழந்தையை  அங்கிருந்து உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர். அங்கு அக்குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனது. இந்த  சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மஞ்சு சிங்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆணுக்கு பதில் பெண் குழந்தை பிறந்ததால் தாயே தன் குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. உலகில் ஆணுக்கு பெண் இணை என்று சொல்லும் இக்காலத்தில் இப்படி நடப்பது வேதனையளிக்கிறது.

Categories

Tech |