Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில்… ரூ.30 முதல் ரூ.300… படுஜோராக தயாராகி வரும் பொங்கல் பானைகள்..!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி அழகர்கோயிலில் பொங்கல் பானை விற்பனை சூடு பிடித்துள்ளது. பானை செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக பணியாற்றி வந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்காநல்லூர், கோவில் சுந்தரராஜன் பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் செய்யும் பணி படுஜோராக நடைபெற்று வருகிறது. அழகர்மலை அடிவாரத்தில் இந்த மண்பானை செய்யப்படுவதால் மூலிகை குணம் நிறைந்த தண்ணீர் மண் பானையில் கலப்பதால் இந்த மண் பானைகளுக்கு மவுசு உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பானைகள் கொள்முதல் செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு தொடர் மழை மற்றும் கொரோனா பேரிடர் காரணமாக உற்பத்தி தேக்கம் அடைந்துள்ளது. பொங்கலுக்கு தற்போது பானைகள் செய்யப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இங்கு செய்யப்படும் பானைகள் ரூபாய் 30 முதல் 300 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

சீசன் காலங்களில் மட்டுமே மண் பானை விற்பனை செய்வதாகவும், பிற நாட்களில் குறைந்த அளவே விற்கப்படுவதாகவும் மண்பானை தொழிலாளர்கள் கூறுகின்றனர். கொரோனாவால் வாழ்வாதாரம் முடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை மண்பானை வாங்கி கொண்டாடினால் மண்பானை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் ஓரளவுக்கு பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |