Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 778 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 6,430 ஆக அதிகரித்தது!

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 778 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,430 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மகாராஷ்டிராவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 840 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக 283 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், மகாராஷ்டிராவில் பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டு தான் வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 23,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325லிருந்து 4,749 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

குறிப்பாக மும்பை மாநகரத்தில் இன்று 500 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மும்பையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,203 ஆக அதிகரித்துள்ளது . அதேபோல, மும்பையில் 473 பேர் இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 168 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Categories

Tech |