மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 162 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1297 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 117 பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் அதிகரித்து கொண்டே போவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வரை மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1135 ஆக இருந்த நிலையில், இன்று 1297 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 16வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்புகள் அதிகரித்த வண்ணமாகவே காணப்படுகிறது. மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்கள் தான் அதிக பாதிப்பை கொண்டுள்ளன.
இதை நிலையில், இன்று காலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 540 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.