மகாராஷ்டிராவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்தியாவிலும் பலவேறு கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக கொரோனா வைரசால் 193 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 8 பேர் பலியாகியிருந்தனர்.
இந்த நிலையில் மேலும் ஒருவர் கொரோனவால் உயிரிழந்தார். புனேவில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மகாராஷ்டிராவில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக இந்தியாவில் இதுவரையில் 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவதில் 47 பேர் வெளிநாட்டினர் உட்பட 942 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.