சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. அதிக வெப்பம் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதுவும் முக்கியமாக சென்னையில் அதிக அளவு வெப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பச்சலனம் சற்று தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் கொளத்தூர், வில்லிவாக்கம், பெருங்குளத்தூர், வண்டலூர், பட்டாபிராம், ராயப்பேட்டை, கீழ்பாக்கம், மயிலாப்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகின்றது.