Categories
உலக செய்திகள்

“என்ன கொடூரம்!”…. ராணுவ வீரர்களா நீங்க?…. மக்களின் கை, கால்களை கட்டி…. உலக நாடுகளை உலுக்கிய அந்த சம்பவம்….!!!!

மியான்மரில் ராணுவத்தினர் அப்பாவி மக்களின் கால் மற்றும் கைகளை கட்டி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து சடலங்களை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் ராணுவத்தினர் ஒரே கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்களை கொன்று அவர்களுடைய சடலங்களை அங்கிருந்த வாகனங்களில் தூக்கிப்போட்டு எரித்து அட்டூழியம் செய்துள்ளனர். அதாவது மியான்மரில் புரட்சியின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவத்தினர் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்று குவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை போராட்டக்காரர்கள் 1500-க்கும் மேற்பட்டோர், அப்பாவி மக்கள் உள்ளிட்டோரை ராணுவம் கொன்று குவித்துள்ளது. அதேபோல் ஒரு பக்கம் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்து மோசமாக சித்திரவதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு மியான்மரில் உள்ள ‘மோ சோ’ என்ற கிராமத்தில் வசித்து வரும் மக்களை சுற்றிவளைத்த ராணுவ வீரர்கள் குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்துள்ளனர்.

அதன் பிறகு அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களில் அவர்களுடைய சடலங்களை போட்டு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பில் பேசிய கரேனி மனித உரிமைகள் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் கிளர்ச்சி படைகளுக்கும், ராணுவத்திற்கும் இடையான சண்டையிலிருந்து தப்பிப்பதற்காக மோ சோ கிராமத்தை சேர்ந்த மக்கள் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தான் ராணுவ வீரர்கள் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியதாக கூறுகின்றனர். அதாவது அந்த ராணுவ வீரர்கள் அப்பாவி மக்களை கைது செய்து அழைத்து சென்றதோடு, அவர்களுடைய கால் மற்றும் கைகளை கட்டி சுட்டுக் கொலை செய்துள்ளனர். பிறகு அவர்களுடைய சடலங்களை வாகனங்களில் தூக்கி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் வாகனங்களில் சடலங்கள் எரிந்து கொண்டிருந்த காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி உலகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கொடூர செயலை செய்த மியான்மர் ராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இருப்பினும் மியான்மரை சேர்ந்த சில ஊடகங்கள் கொலை செய்யப்பட்ட அனைவரும் ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் என்று கூறியுள்ளது. இதற்கிடையே மோ சோ கிராமத்தைச் சேர்ந்த பலரை காணவில்லை என்ற பரபரப்பு தகவலும் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்த கொடூர சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

Categories

Tech |