Categories
உலக செய்திகள்

மியான்மரில் நேற்று மட்டும் 114 பேர் சுட்டுக்கொலை…. ராணுவ ஆட்சி மக்களுக்கு எச்சரிக்கை…..!!

மியான்மரின் பாதுகாப்பு படையினர் ஒரே நாளில் 114 பேரை சுட்டுக் கொல்லப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்திவிட்டு ராணுவ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அதன் ஆணவத்தை மக்கள் மீது காட்ட தொடங்கியது. அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாள்தோறும் தொடர்ச்சியாக வீதிகளில் போராட்டம் செய்து வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி காரணமாக போராட்டத்தை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றனர்.

மியான்மரின் 2-வது நகரமாக இருக்கும் மாண்டலேயில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் ஐந்து பேர் இளைஞர்கள் என உள்ளூர் செய்திகள் மூலம் வெளிவந்துள்ளது. இன்று மதியம் 3 மணி அளவில் நாடு முழுவதும் மொத்தம் 91 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். யங்கோன் இன்சீன் மாவட்டம் மியான்மரில் மிகப்பெரிய நகரமாக இருக்கின்றது. அங்கு நடந்த ஒரு போராட்டத்தில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

ராணுவம் மக்களை பாதுகாப்போம் என்றும் ஜனநாயகத்திற்காக பாடுபடுவோம் என்றும் ஜெனரல் மின் ஆங் ஹேலிங் கூறியிருந்தார். அவர் கூறிய மறுநாளே அதற்கு எதிர்மாறாக மிருகத்தனமான ராணுவ கட்சி இத்தாக்குதலை நடத்தியுள்ளது. மியான்மரின் ஆயுதப்படை தினத்தை கொண்டாட விரும்பாததால், அங்கு இடையூறு செய்யும் விதமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தலையில் அல்லது பின்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் மக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |