நாகையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நர்சிங் ஆசிரியர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினத்தை எடுத்த பகுதியில் பாஜக நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாஜக மாவட்ட தலைவரின் மனைவி திருமலை ராணி மேலாளராக உள்ள கார்த்திகேயன் நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த கல்லுரியில் பணி புரியும் சதீஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் அக்கல்லூரியில் பயின்று வந்த நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு செல்போன் உரையாடல் வெளியானது. அந்த உரையாடலில் கட்டாயப்படுத்தி மாணவியை ஆசிரியர் தன்னுடைய வீட்டிற்கு அழைப்பது போல ஆடியோ வெளியானது. அந்த மாணவி கெஞ்சியும் கேட்காமல், கட்டாயம் வா என்று சொல்லி அழைத்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கல்லூரி மற்றும் மாணவிகளிடம் தனித்தனியாக புகார்களை கேட்டறிந்தார்கள். அதில் மாணவிகள் சதிஷ் என்ற ஆசிரியர் இப்படித்தான் கல்லூரிகளில் இப்படித்தான் பேசுவார் என்று தெரிவித்தார்கள். கல்லூரி நிர்வாகம் ஏற்கனவே ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்தது. இந்த நிலையில் சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆசிரியர் பேசியது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நாகை நகர காவல் நிலைய போலீசார் ஆசிரியர் சதிசை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு எடுத்து சென்றுள்ளனர்.